இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி முடித்தது. இந்த தொடரின் டி20 போட்டிகளை கைப்பற்றினாலும், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளை இழந்த இந்திய அணி கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் அனுபவ வீரரான சஹாவை உட்காரவைத்து அவருக்கு பதிலாக இளம்வீரர் பண்டினை விளையாட வைத்தார் கோலி. அவரின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் ஏன் அணியில் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்து தற்போது கோலி கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
அதன்படி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரிலும் பண்ட்டிற்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். இதனால் அவருக்கு இரண்டு தொடர்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்டிலும் தொடரிலும் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பண்ட்டிற்கு திடீர் வாய்ப்பினை கோலி அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : தொடர்ச்சியாக ஒரு வீரர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தால் அவரிடம் உள்ள தன்னம்பிக்கை குறையும். மேலும் இளம் வீரர் அவருக்கான வாய்ப்பை நாம் சரியான நேரத்தில் வழங்கும் போது அவர் பிரகாசிப்பார் என்ற கருத்தினை கொண்டே அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்தோம்.
மேலும் தனது குறைகளை நீக்கி அவர் பாசிட்டிவாக விளையாட நிறைய பயிற்சிகளை மேற்கொண்டார். எனவே நிச்சயம் இந்த தொடரில் சாதிப்பார் என்று டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தோம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் இது ஒரு மோசமான சுற்றுப் பயணமாக அமைந்தது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



