குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் – கோலி பேட்டி

kohli
- Advertisement -

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று விளையாடி வரும் சுழற்பந்து வீச்சு இணையான சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

Chahal

- Advertisement -

தற்போது நடைபெற இருக்கும் டி20 தொடரில் கூட இவர்கள் இருவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாடாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார்.

அதில் கோலி கூறியதாவது : சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாததற்கு காரணம் மற்ற அணியில் 9 மற்றும் 10 ஆவது இடத்தில் இறங்கும் வீரர்கள் கூட ரன் குவிப்பில் ஈடுபடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டும் மேலும் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை கருத்தில் கொண்டும் நாங்கள் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக பேட்டிங் செய்யும் திறனுடைய சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளோம்.

chahal

அதன்படி க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் ஆகியோர் பேட்டிங் செய்து பந்து வீசுவார்கள் என்பதால் அதன் காரணமாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இது இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு அதனால் நிர்வாகத்தின் முடிவை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மேலும் அடுத்த வருடம் உலக கோப்பையை கைப்பற்றும் எண்ணத்துடன் இது போன்ற புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இருப்பினும் அவர்களுக்கான வாய்ப்பு வரும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement