ஷ்ரேயாஸ் ஐயரை 3 ஆவது வீரராக இறக்கியதன் காரணம் இதுதான். ரகசியத்தை பகிர்ந்த கோலி – விவரம் இதோ

Iyer-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

pant 2

- Advertisement -

இந்த போட்டியில் நேற்று வழக்கமாக 3 ஆவது இடத்தில் இறங்கும் விராட்கோலி மீண்டும் தனது இடத்தை மாற்றி நான்காவது வீரராக களமிறங்கினார். மூன்றாவது வீரராக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்ததிய ஐயர் 26 பந்துகளுக்கு ஒரு சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் வெற்றிக்கு அருகில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் இந்திய அணி வெற்றிக்கு பிறகு தனது இடமாற்றம் குறித்து கோலி பேட்டியும் அளித்திருந்தார். அதில் கோலி இந்த இடமாற்றம் குறித்து குறிப்பிட்டதாவது : நாங்கள் அனைத்து வித திட்டங்களையும் சிறப்பாக கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். எங்களது அணி வீரர்களை முன்னேற்றத்திற்கான பாதையில் கொண்டு சொல்வதால் எந்த அழுத்தமும் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறோம்.

Iyer 1

போட்டிகளை சிறப்பாக முடித்து வரும் இந்திய அணியில் நான் மூன்றாவது மற்றும் நான்காவது என எந்த இடத்திலும் ஆடுவதற்கு தயாராகி வருகிறேன். அதேசமயம் இந்த மூன்றாவது இடத்தில் இருக்கும் வாய்ப்பினை இளம் வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். எனக்கு மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

iyer 3

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இதேபோன்று கோலி நான்காம் இடத்தில் இறங்கி மூன்றாவது இடத்தில் துபே அதிரடியாக விளையாட 3 ஆவது வீரராக களமிறங்கினார் அதைப்போன்றே நேற்றும் இலக்கு குறைவாக இருந்தது மட்டுமின்றி இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடுவதற்காக முன்கூட்டியே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement