மீண்டும் முதலிடத்தை தவறவிட்ட கோலி. ரஹானே மற்றும் அகர்வால் முன்னேற்றம் – விவரம் இதோ

kohli 5
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி இன்று வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் கோலி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் மீண்டும் முதலிடத்தை இழந்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

Kohli-2

- Advertisement -

விராத் கோலிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து சிறப்பாக விளையாடி வரும் ஸ்டீவன் ஸ்மித் 911 புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கோலி பெரிய அளவில் ரன் குவிக்க வில்லை. முதல் இன்னிங்சில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

மோசமான ஆட்டம் காரணமாக தற்போது 906 புள்ளிகளுடன் அவர் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த ஸ்மித் அதன்பிறகு எட்டாவது முறையாக தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீரரான ரஹானே எட்டாவது இடத்தில், புஜாரா 9ஆவது இடத்திலும், மாயங்க் அகர்வால் பத்தாம் இடத்திலும் மாற்றம் இல்லாமல் இருக்கின்றனர்.

rahane

முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரகானே 8வது இடத்திலும், அரை சதம் அடித்த அகர்வால் 10 ஆவது இடத்திலும் உள்ளனர். முதல் டெஸ்ட் மோசமாக விளையாடிய புஜாரா 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்திற்கு சென்றுள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் 9 ஆவது இடத்திற்கு பின் தங்கி உள்ளார். இசாந்த் சர்மா 17-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜா மூன்றாவது இடத்திலும், அஸ்வின் 5வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement