டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கணுனா கோலி இந்த 3 விஷயத்தில் கவனமா இருக்கனும் – விவரம் இதோ

Kohli

ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்காக இப்போதிலிருந்தே அனைத்து அணிகளும் தங்கள் அணிகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்திய அணியும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்தெந்த வீரர்களை இறுதி பட்டியலில் சேர்ப்பது என்கிற திட்டத்தை வகுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி உலக கோப்பை டி20 அதற்கு முன்பாக மூன்று முக்கிய சிக்கல்களை தீர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே இந்திய சிக்கலில் இருந்து தப்பித்து கோப்பையை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. அப்படி கோலி சரிசெய்ய வேண்டிய 3 முக்கியமான விடையங்களை இங்கு பார்ப்போம்.

- Advertisement -

ஸ்பின் பவுலர்களின் தேர்வு :

ஸ்பின்னை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு மிக முக்கிய வீரர்களாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருந்து வந்தனர்.ஆனால் சமீபகாலங்களாக அவர்கள் இருவரது பங்களிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. எனவே எந்த ஸ்பின் பவுலரை தேர்வு செய்வது என்று இந்தியா அணி யோசித்து வருகிறது.

Jadeja

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக பங்களித்தனர். ஸ்பின் ஆல்ரவுண்டர் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு கடும் போட்டி எழும்.

ஓபனிங் பேட்ஸ்மேன் :

ஓபனிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா ஒரு வீரராக எப்போதும் இறங்குவார். மற்றொரு முனையில் தவானை இறக்குவதா அல்லது கேஎல் ராகுல் இறக்குவதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இவர்கள் இருவரும் சரியாக பங்களிக்காததால் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஓபனிங் இறங்கினார்.

Rohith-1

ஆனால் தற்போது ஐ.பி.எல் தொடரில் தவான் மற்றும் ராகுல் என இருவரும் சிறப்பாக விளையாட யாரை துவக்க வீரராக களமிறக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ளது. எனவே ரோகித் சர்மாவுடன் யார் ஓப்பனிங் இறங்க போகிறார்கள் என்ற கேள்வி இப்போது வரை இருந்து வருகிறது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான பேட்டிங் பொசிஷன் :

இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் நன்றாக ஆடி வரும் நிலையில் மேலும் சீனியர் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் ,ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா மறுமுனையில் நன்றாக ஆடி வரும் நிலையில் இவர்களை எந்தெந்த இடத்தில் வைப்பது என்கிற குழப்பம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. ரவிந்திர ஜடேஜாவை எந்த இடத்தில் ஆட வைப்பது என்று மேலும் குழப்பத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

எனவே ஒருபக்கம் இவர்கள் அனைவரும் நன்றாக ஆடி வந்தாலும் வீரர்களை தொடர்ச்சியாக மற்றும் நிலையாக எந்தெந்த இடங்களில் ஆட வைப்பது என்கிற கேள்வி இந்திய அணியிடம் தற்போது வரை இருந்த வண்ணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement