யார் சொல்லியும் கேட்காமல் கோலி எடுத்த இந்த முடிவே தோல்விக்கு காரணமா ? – அதிர்ச்சி தகவல் இதோ

Kohli-4
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.

dekock

- Advertisement -

அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ஐயர் நான்காவது வீரராகவும், பண்ட் 5 ஆவது வீரராக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான் அவுட் ஆகியபோது ஐயர் மற்றும் பண்ட் ஆகிய இருவரும் களம் இறங்க தயாராகி இறங்கி வந்தனர். இதனை கண்ட கோலி சற்று அதிர்ச்சி அடைந்தார். வீரர்களுக்கு இடையே சரியான கருத்து தெரிவிக்கபடாததால் இருவரும் நடந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

pant 1

இருப்பினும் நேற்றைய போட்டியில் ஐயர் நான்காக களமிறங்கி இருக்கவேண்டும். பிறகு ஐந்தாவதாக பண்ட் வந்திருந்தால் பிற்பகுதியில் அதிரடியாக ஆடி இருப்பார். ஆனால் பண்ட் விரைவாக வந்து அவுட்டாகி சென்றதால் நேற்றும் இந்திய அணியால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. தொடர்ந்து நான்காவது வீரராக பண்ட் இந்திய அணியில் களமிறங்குவது தவறான முடிவு என்று பலர் கூறியும் அதை கேட்காமல் கோலி மற்றும் பயிற்சியாளர் எடுத்த இந்த தவறான முடிவே இந்திய அணி தோல்விக்கு காரணம் என்று நெட்டிசன்கள் கோலியை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement