இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்த கோலி – விவரம் இதோ

Ind-vs-aus-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Ind vs Aus

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் கடந்த முதலாவது போட்டியில் காயமடைந்த பண்டிற்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே இணைந்துள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவதீப் சைனி அணியில் இணைந்துள்ளார். இந்த இரண்டு முக்கிய மாற்றங்களை கோலி இந்த போட்டியில் கொண்டுவந்துள்ளார்.

Pandey 1

மேலும் ஏற்கனவே முதலாவது போட்டியில் 4 ஆவது வீரராக களமிறங்கி சர்ச்சையை எதிர்கொண்ட கோலி இன்று 3 ஆவது வீரராக களமிறங்கி ஆடிவருகிறார். இதுவரை இந்திய அணி ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -