
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டு முடிந்துள்ளது. இந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று முடிவு செய்துள்ளார். மேலும் இந்த போட்டி குறித்து பேசிய கோலி : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம்.
இந்த மைதானம் கடினமாக தெரிவதால் முதலில் பந்து வீசுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். சிறிய மைதானம் என்பதால் அவர்களைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருக்கும். நாங்கள் சிறப்பான பந்து பந்துவீச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தால் தான் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று திரும்பி வர முடியும் என்று கூறினார்.
அதன் பிறகு இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனியும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்க்கு பதிலாக சாஹலும் அணியில் இணைகிறார்கள் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.