சென்ற போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – விவரம் இதோ

Cup

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ind vs ban

அதன்படி தற்போது பங்களாதேஷ் அணி 12 ஓவர்கள் முடிவில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் உமேஷ் யாதவ் அடுத்த விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடி வருகிறது.

அதற்கு காரணம் யாதெனில் சென்ற போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து என இரண்டிலுமே அசத்தியது. அனைவரும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியின் இன்றைய போட்டிக்கு மாற்றம் எதுவும் தேவை இல்லை என்றும் மேலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அணியில் எந்த மாற்றமுமின்றி கோலி இன்றைய அணியை மாற்றமில்லாமல் களமிறக்கியுள்ளார்.

ishanth

பங்களாதேஷ் அணி முதல் 10 வரை 17 ரன்களை அடித்துள்ளது. எனவே ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்காது சற்று தெளிவாக தெரிகிறது. பந்துவீச்சில் எதிர்பார்த்தது போலவே வேகம் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -