தோத்துட்டோம்னு நெனச்சேன். இறுதியில் ஜெயிச்சாச்சு ஆனா இதுபோதாது – கேப்டன் கோலி ஓபன் டாக்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Shami 1

- Advertisement -

இந்தப் போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கபேசுகையில் : ஆட்டத்தின் போக்கை பார்த்தபோது நாங்கள் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதினேன். கேன் வில்லியம்சன் விளையாடிக் கொண்டிருக்கையில் போட்டி முடிந்துவிட்டதாக பயிற்சியாளரிடம் கூறிக் கொண்டு இருந்தேன்.

அப்போது முக்கியமான சமயத்தில் ஷமி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை நம் பக்கம் திருப்பினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை வீசி தனது அனுபவத்தை இந்த போட்டியில் அவர் காண்பித்தார். அவரது அபார பந்துவீச்சு நம்மை சூப்பர் அவருக்கு அழைத்துச் சென்றது. சூப்பர் ஓவரிலும் நியூசிலாந்து அணி நமக்கு கடுமையான நெருக்கடியை தந்தது. ஆனால் ரோகித் சர்மா அற்புதமாக விளையாடி நமக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

Williamson

போட்டியின் முதல் பாதி மற்றும் சூப்பர் ஓவர் என ரோஹித்தின் பேட்டிங் அருமையாக இருந்தது. டெத் ஓவரில் சிறப்பாக வீசும் பும்ராவை வில்லியம்சன் அருமையாக கையாண்டார். இந்த வெற்றி சிறப்பானது இருப்பினும் இந்த தொடரை 5 – 0 என்ற கணக்கில் வெல்ல முயற்சிப்போம் என்று கோலி கூறினார். மேலும் இதுவரை அணியில் விளையாட சுந்தர் மற்றும் சைனிக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு தரப்படும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement