சச்சின் சேவாக் டிராவிட் வரிசையில் டெஸ்ட் வரலாற்றில் சிறப்பான சாதனையை செய்ய இருக்கும் கோலி – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு முக்கியமான சாதனைக்கு குறிவைத்துள்ளார்.

Kohli

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் இந்திய வீரர்களான சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்துள்ளனர். இவர்களை அடித்து அடுத்து நான்காவது வீரராக இந்த சாதனையை செய்யும் வீரராக தற்போது கோலிக்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் 242 ரன்கள் அடித்தால் அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைப்பார்.

இந்த தொடரில் மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் அவர் நிச்சயம் முதல் போட்டியில் கூட இந்த சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சச்சின் 1741 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Kohli

அவருக்கு அடுத்த சேவாக் 1306 ரன்களும் அதற்கடுத்து டிராவிட் 1252 அடித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 947 ரன்களும், விபிஎஸ் லட்சுமணன் 926 அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொடரில் கோலி நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைப்பார் என்பது மட்டும் தற்போது உறுதியாகக் கூறமுடியும்.

Advertisement