இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் கேப்டன் கோலியும், ரவிசாஸ்திரியும் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தனர். அதற்கு காரணம் ரோகித் சர்மாவுடன் இருந்து கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலளிக்க முடியாது என்பதால் இருவரும் அந்த சந்திப்பை புறக்கணித்தார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரோகித் உடனான உறவு குறித்து கோலி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நான் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை யாரோ குழப்புகிறார்கள் அதில் யார் பயனடைவார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ரோகித்துக்கும், எனக்கும் நல்ல உறவு நீடிக்கிறது நான் எப்பொழுதும் ரோஹித்தை பாராட்டி வந்துள்ளேன். ஏனெனில் அவர் சிறந்த வீரர் என்று நான் நம்புகிறேன்.
மேலும் நான் கோபப்பட்டால் என் முகத்திலும் என்னுடைய நடவடிக்கையிலும் அதை நீங்கள் எளிமையாக பார்க்க முடியும். எனவே இந்த பிரச்சினையில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்று கோலி கூறி இருந்தார். ஆனால் இந்நிலையில் மியாமி நோக்கி இந்திய அணி புறப்படும் முன் இந்திய வீரர்களுடன் கோலி செல்பி எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
Miami bound ???????????????? pic.twitter.com/ywIh0ePTuZ
— Virat Kohli (@imVkohli) July 29, 2019
அந்த செல்பியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ராகுல், சுந்தர், மனிஷ் பாண்டே ,கலீல் அஹ்மது மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் இருந்தனர். இதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்குள் பிரச்சனை இல்லை எனில் அவரை ஏன் புகைப்படம் எடுக்கவில்லை என்று மீண்டும் புகைச்சலை தொடங்கியுள்ளனர். பிரச்சனை இருப்பது உண்மைதான் என்றும் சிலர் அந்த புகைப்படத்துக்கு கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



