நியூசி அணிக்கு எதிராக தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கவுள்ள கோலி – சாதனை விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

IndvsNz

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் விராட் கோலி 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் தோனியின் பெரிய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அது யாதெனில் இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி 1112 ரன்களுடன் வைத்துள்ளார்.

தற்போது டி20 போட்டிகளில் கேப்டனாக 1088 ரன்கள் அடித்துள்ள கோலி மேலும் 25 ரன்களை அடிக்கும் பட்சத்தில் தோனியின் இந்த சாதனையை கேப்டனாக அவர் முறியடிப்பார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவில் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 1273 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli-2

மேலும் இந்த தொடரில் கோலி ஒரு அரைசதம் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை வில்லியம்சன், டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கோலி ஆகியோர் 8 அரைசதங்களை கேப்டனாக அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement