தோனியும் இல்ல கங்குலியும் இல்ல. கோலிதான் இதுல டாப்னு சொல்றாங்க – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Ind 1

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி கேப்டனாக தனது 50வது டெஸ்ட் போட்டியை விளையாடி முடித்து பல சாதனைகளை தன்வசப்படுத்திக் கொண்டார். அதிலும் குறிப்பாக 50 ஆவது டெஸ்ட் போட்டி போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்திய கோலி கேப்டன்சியில் புதிய சாதனை செய்துள்ளார்.

அந்த சாதனை யாதெனில் இதுவரை தோனிக்கு அடுத்து 50 டெஸ்ட் போட்டியில் கேப்டன் செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் 50 டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் வரிசையில் ஸ்டீவ் வாக் (37 வெற்றி), பாண்டிங் (35 வெற்றி) அதற்கு அடுத்து தற்போது கோலி 30 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.

Kohli

இதனால் 50 டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் மற்றும் உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்த டெஸ்ட் கேப்டனாக மாறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் கோலி தான் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement