மற்ற இந்திய கேப்டன்கள் 29 போட்டியில் செய்ததை. வெறும் 10 போட்டிகளில் சாதித்து காட்டிய கிங் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Nadeem

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நான்காம் நாளான இன்று மேலும் ஒரு ரன் சேர்த்து 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கோலி தலைமையிலான இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கோலி தலைமையிலான இந்திய அணி பெறும் 7 ஆவது டெஸ்ட் வெற்றியாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது.

Ind

இதற்கு முன்னர் 29 போட்டிகளில் வெவேறு கேப்டன்களுடன் விளையாடியுள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மொத்தமாக 7 போட்டிகளில் மட்டுமே வென்று உள்ளன. அதனை கணக்கிட்டு பார்க்கும் போது மற்ற கேப்டன்களை விட கோலியின் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெற்றி சதவீதம் 70 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement