ரோஹித்தை தாண்டி டி20 போட்டிகளிலும் கிங் என்பதை மீண்டும் நிரூபித்த கோலி – விவரம் இதோ

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Kohli 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உடன் 72 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் கோலியின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு கோலி தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்

மேலும் ரோகித் நேற்றைய போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழக்க அப்போது களமிறங்கிய கோலி சிறப்பாக விளையாடிய டி20 போட்டிகளில் தனது 22வது அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக முறை 50+ அடித்த வீரரானார். மேலும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் (2440 ரன்கள்) என்ற பெருமையும் பெற்றார்.

kohli

இதற்கு முன்னதாக ரோஹித் 2434 ரன்களுடன் ரோகித் கோலிக்கு முன்னதாக முதலிடத்தில் இருந்தார். தற்போது கோலி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித்தை தாண்டி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளிலும் தான் கிங் என்பதை மீண்டும் கோலி நிரூபித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement