விளம்பரத்தில் மட்டும் கோலி போன வருஷம் எவ்ளோ சம்பாரிச்சி இருக்காரு தெரியுமா ? – இந்திய அளவில் முதலிடம்

Kohli

விராட் கோலி இந்திய அணிக்காக பல வெற்றிகளையும், பல சாதனைகளையும் படைத்து அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். விராட் கோலி இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இருக்கிறார். விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 254 ரன்கள் குவித்ததே அவரது அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. விராட் கோலி 70 முறை சதம் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kohli

இவ்வாறு கிரிக்கெட் துறையில் பல சாதனைகளைப் படைத்து வரும் விராட் கோலி தற்போது இந்திய அளவில் விளம்பரங்களில் நடித்து அதிக சம்பளம் ஈட்டியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி கடந்த நான்கு வருடங்களாக இதில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவரது விளம்பரங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் விராட் கோலி தங்களது விளம்பரங்களில் நடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். விராட் கோலியின் கையில் தற்போது 30க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு விளம்பரங்களின் மூலம் அதிக சம்பளம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

Kohli

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி ரூபாய் 1737 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். இதன்மூலம் விராட் கோலி முதலிடத்தை பிடித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து அக்ஷய்குமார் விளம்பரங்களின் மூலம் ரூபாய் 860 கோடி சம்பளம் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து ரன்வீர் சிங் (740 கோடி), ஷாருக்கான் (371 கோடி) தீபிகா படுகோன் (364 கோடி) அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

- Advertisement -

Kohli-4

திரைப்பட நடிகர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி கிரிக்கெட் வீரர் விராட் கோலி முன்னிலை வகித்திருப்பதால் பலரது பாராட்டை பெற்று வருகிறார்.