கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா ? – அய்யோ இவ்வளவா ?

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி உலகளவில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை தாண்டி அதிக அளவில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்றால் அது மிகையல்ல. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் ஏ ப்ளஸ் பிரிவில் சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி விளம்பரங்கள், நிறுவன பங்கு என பலவகையில் கோடிகளை விராட் கோலி குவித்து வருகிறார்.

Kohli

- Advertisement -

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அதே அணிக்காக மட்டும் விளையாடி வரும் அவருக்கு ஒரு பெரிய தொகையை ஆண்டுதோறும் ஆர்.சி.பி அணி வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அனைவரும் வியக்க வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த வகையில் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்று இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் ரொனால்டோ இருக்கிறார் இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரர் ராக் இருக்கிறார். ராக் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கும் ரூபாய் 11 கோடி ரூபாயை அவர் ஊதியமாக பெறுகிறார்.

Kohli-3

இப்படி ஒரு பதிவிற்கு கோடிகளை குவிக்கும் பிரபலங்களின் இந்தப் பட்டியலில் மொத்தம் 395 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த 395 பேர் பட்டியலில் இந்திய வீரர்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அதிலும் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் கோலி தான் பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி வரை வருமானமாக பெறுகிறார். இப்படி ஒரு பதிவிற்கு 5 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்குமாயின் ஆண்டுதோறும் எவ்வளவு சம்பாதிப்பார் என்று கணக்கில் கொள்ளுங்கள்.

Kohli-ABD

விராட் விராத் கோலியை தவிர இந்த 395 பேர் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ், ஏபி டிவிலியர்ஸ், ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கேட்டாலே தலைசுற்ற வைக்கும் விராத் கோலியின் இந்த வருமான விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement