கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்தால் இவ்வளவு வருமானமா ? – வாய்பிளக்க வைக்கும் வருவாய்

Kohli
- Advertisement -

இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் வருமானத்தை ஆய்வு செய்து அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணி கேப்டன் கோலி இடம்பெற்றுள்ளார்.

Kohli

- Advertisement -

இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்பான்சர் பதிவுகளை பிரபலங்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம். அந்த வகையில் அதிக தொகையை வசூலிக்கும் வீரர்களை பற்றிய கணக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் யார் யார் அதிக பணம் சம்பாதிக்கின்றனர் எந்த விவரம் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் உலக அளவில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட சுமார் 19 ஆயிரத்து 600 டாலர் வசூலிக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 35 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார். உலக அளவில் இவ்வாறு வருவாய் ஈட்டும் பட்டியலில் 9 வது இடத்தில் கோலி உள்ளார். முதலிடத்தில் ரொனால்டோ, இரண்டாமிடத்தில் நெய்மர் மற்றும் மூன்றாம் இடத்தில் மெஸ்ஸி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement