லஞ்சம் கொடுக்க சொன்ன பயிற்சியாளர். திகைத்து நின்ற கோலி. என் அப்பவே எனக்கு நேர்வழியை கற்றுத்தந்தார் – கோலி பகிர்ந்த ரகசியம்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தற்போது இந்திய அணியில் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோலி அதனைத் தொடர்ந்து தற்போது வரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Kohli

இந்திய அணிக்காக இதுவரை 86 டெஸ்ட் போட்டிகள், 248 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலியால் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாத சாதனை எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தனது அசாத்தியமான பேட்டிங் மளமளவென ரன்களைச் சேர்த்து வரும் அவர் விரைவில் சச்சினின் 100வது சதத்தை கடந்து அதற்கு மேலும் சதங்களை அடிப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த அளவிற்கு தனது பேட்டிங் மூலம் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் கோலி தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வீட்டில் முடங்கி உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி வரும் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உடன் நேரலையில் உரையாடினார்.

chhetri

இந்த உரையாடலில் கோலி தனது தந்தை மற்றும் இளமை கால கிரிக்கெட் குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : என்னுடைய தந்தை தெருவிளக்கில் படித்தவர் தன்னை ஒரு வழக்கறிஞராக உயர்த்திக் கொண்டார். குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை அவர் எப்போதும் விரும்ப மாட்டார். கடின உழைப்பை மட்டுமே நம்பி அதை மட்டுமே செய்ய வேண்டும் என்று எனக்கு போதிப்பார்.

- Advertisement -

சிறுவயதில் நான் ஒரு முறை சரியாக விளையாடாத காரணத்தினால் நான் விளையாடிய அணிக்கு தேர்வாகவில்லை. இலஞ்சம் கொடுத்து தேர்வு செய்து அனுப்பிவிடலாம் என்று என்னுடைய பயிற்சியாளர் என் தந்தையிடம் கூறினார். ஆனால் என் தந்தையோ அவன் திறமையாக விளையாடினால் மட்டுமே அவனுக்கு இடம் கொடுங்கள் இல்லை என்றால் அவனுக்கு இடம் வேண்டாம். அவனுக்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறி விட்டார்.

kohli dad

அதுதான் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது. நீங்கள் முன்னேற விரும்பினால் உங்களுடைய கடின உழைப்பு மட்டுமே செலுத்த வேண்டும். மாறாக வேறு ஏதும் குறுக்கு வழியில் விடுபடக் கூடாது என்பதனை இதன் மூலமே எனக்கு என் தந்தை போதித்தார். அவர் வாழ்ந்த விதமே எனக்கான பாடமாக அமைந்தது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement