தோனியின் இந்த சாதனையை நான் கண்டிப்பாக நிகழ்த்துவேன் – விராட் கோலி சபதம்

Dhoni
- Advertisement -

தோனி தலைமையிலான இளம் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஆண்டிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதன் பின்னர் 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும் கோப்பையை இதுவரை வெல்ல முடியவில்லை.

dhoni kohli

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு மற்றும் அதற்கடுத்த ஆண்டு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது டி20 இந்திய அணியின் கேப்டனான கோலி அதுகுறித்து அளித்த பேட்டியில் : 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை நான் கண்டிப்பாக படைப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் அதிகமாக உள்ளது.

மேலும் தற்போது உள்ள அனைத்து அணிளையும் தோற்கடிக்கும் வலிமை எங்களிடம் உள்ளது. கண்டிப்பாக எங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து கொண்டு சென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் நாங்கள் உள்ளோம் கண்டிப்பாக கோப்பையை சாதித்து காண்பிப்போம் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement