ஷர்துல் தாகூர் மீது நம்பிக்கை வைத்து அணியில் விளையாட வைக்க இதுவே காரணம் – கோலி வெளிப்படை

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில் இந்திய அணியின் மற்றொரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அணியில் இணைத்தது பெரும் ஆச்சரியமான விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் எப்பொழுதும் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் உடனேயே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்.

Kohli

- Advertisement -

வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் அதே பார்மெட்டையை கடைபிடித்த இந்திய அணியின் மீது இதற்காகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களிலும் இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் உடன் களமிறங்குவது தவறு என்று விமர்சிக்கப்பட்டது.

அதனால் அணியில் சிறிது காலம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இடம்பெற்று விளையாடி வந்தார். இந்நிலையில் பாண்டியா தொடர்ந்து காயம் காரணமாக டெஸ்ட் அணியில் விளையாட முடியாமல் போக மீண்டும் இந்திய அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் உடன் விளையாடியது. ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாகூர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அரைசதம் அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார்.

thakur 2

அதன்பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி அளித்து ஒரு பழைய பேட்டியில் : ஷர்துல் தாகூர் நிச்சயம் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. மேலும் அவர் பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங், பீல்டிங் என நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுவார் எனவே இந்திய அணிக்காக அடுத்த ஆல்ரவுண்டராகம் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Thakur

கோலி இப்படி தெரிவித்த சில காரணங்களுக்காகவே தற்போது ஆல்-ரவுண்டராக ஷர்துல் தாகூரை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த தொடரில் ஷர்துல் தாகூர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணியில் நிரந்தர வீரராக மாறவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement