வில்லில் இருந்து பாயும் அம்பு போன்று துல்லியமாக ஸ்ட்ரெய்ட் சிக்சர் அடித்த கோலி – வைரல் வீடியோ

Kohli

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் துவக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

அடுத்து இளம் வீரர்களுக்கு தொடர்ந்து கோலி வாய்ப்பு அளித்துக்கொண்டே இருந்தால் அதாவது வழக்கமாக மூன்றாவது இடத்தில் இறங்க வேண்டிய கோலி நேற்று 6-வது இடத்தில் இறங்கினார். அவருக்கு முன்பாக சாம்சன், பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இறங்கிய பின்னரே கோலி களமிறங்கினார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தான் களம் இறங்கினாலும் தனது பங்கினை சிறப்பாக செய்தார் என்று கூறலாம்.

17 பந்துகளை 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் அடித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 17-வது ஓவரில் மேத்யூஸ் பந்துவீச்சில் ஸ்ட்ரெய்ட் திசையில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களை கவர்ந்தது. வில்லிலிருந்து அம்பு எவ்வாறு குறி தவறாமல் பாயுமோ அதனைப் போன்று சரியாகப் பவுலருக்கு நேர் திசையில் தூக்கி சிக்ஸ் அடித்த கோலி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். கோலியின் இந்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.