வீடியோ : கரீபியன் பிளேவரில் “நோ லுக் சிக்ஸரை மைதானத்தின் மேற்கூரைக்கு அடித்த விராட் கோலி

Kohli
- Advertisement -

“நோ லுக் சிக்ஸர்” என்பது தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் விளையாடி உள்ளதை நாம் பார்த்துள்ளோம். பந்து பேட்டில் படும்போது அந்த இடத்தை மட்டுமே பார்த்தபடி பந்தினை சிக்ஸருக்கு விரட்டும் பாணி தான் இந்த நோ லுக் சிக்ஸர். இந்த வகையான சிக்ஸர்களை சமீபகாலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே பிளட்சர் அதிகமாக அடித்து வருகிறார். இதுபோன்ற சிக்ஸர்கள் பார்ப்பதற்கே அருமையாகவும் இருக்கும்.

kohli 1

- Advertisement -

இந்நிலையில் அந்த வரிசையில் ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலி அந்த சிக்ஸரை நேற்றைய போட்டியில் அடித்தார். சார்ஜா மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில் தோனி டாஸ் வென்றதும் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது அதிரடியான துவக்கத்தை பெற்றது.

இந்த போட்டியின் ஐந்தாவது ஓவரின் போது ஷர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது பந்தை கோலி “நோ லுக் சிக்ஸரை” விளாசினார். தாகூர் வீசிய அந்த லென்த் பந்தினை சரியாக பிக்கப் செய்த கோலி அந்த பந்தை மைதானத்தின் மேற்கூரைக்கு அடித்தார்.

82 மீட்டர் பயணித்த அந்த பந்து மைதானத்தின் மேல் கூரையில் விழுந்தது. மேலும் கோலி அடித்த இந்த அற்புதமான ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 41 பந்துகளை சந்தித்த விராட் கோலி 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 53 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement