கேப்டனாக ரிக்கி பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட் – அசரவைக்கும் புள்ளி விவரம் இதோ

Ponting
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது அதன்படி முதலில் விளையாடிய மழையின் காரணமாக போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

- Advertisement -

அந்த 35 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டி.எல்.எஸ் முறைப்படி 32.3 ஓவர்களில் 256 ரன்கள் குவித்து வெற்றி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில் கோலி சிறப்பாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 43வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் கோலி ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறினார். இந்நிலையில் கேப்டனாக அவர் ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி கிட்டத்தட்ட நெருங்கி உள்ளார். அந்த புள்ளி விவரம் யாதெனில் இதுவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்காக 220வது இன்னிங்சில் கேப்டனாக விளையாடி 22 சதங்களை விளாசியுள்ளார்.

Kohli

ஆனால் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்ற விராட் கோலி ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக இதுவரை 76 போட்டியில் தலைமை தாங்கியுள்ள விராட் கோலி 21 சதத்தை கேப்டனாக அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் பாண்டிங் சாதனையை அவர் முடியடிக்க இன்னும் 2 சதங்களே தேவை என்பதால் விரைவில் கேப்டனாக அந்த சதையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement