இரட்டை சதம் விளாசி பல சாதனைகளை தன்வசப்படுத்திய கோலி – சாதனை விவரம் இதோ

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Kohli 4

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் குவித்திருந்தார். தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணி தற்போதுவரை 4 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை குவித்துள்ளது.

தொடர்ந்து ஆடிய விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்திய வீரர்களில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் 6 இரட்டைச் சதங்களை அடித்து உள்ளனர். டிராவிட் 5 இரட்டை சதங்களை அடித்துள்ளார் எனவே இவர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தற்போது கோலி 7 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli

இத்தனை ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் அடித்த அதிகபட்ச இரட்டை சதங்கள் ஆக இது கருதப்படுவதால் கோலி தற்போது இன்னொரு உச்சத்தை தொட்டு இருப்பது உண்மை. மேலும் தற்போது தொடர்ந்து ஆடி வரும் கோலி 216 ரன்களுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement