சத்தமே இல்லாமல் உதவி செய்து இந்திய முன்னாள் வீராங்கனையின் அம்மாவை காப்பாற்றிய கோலி – குவியும் வாழ்த்து

Kohli-4

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சாதாரண மக்கள், அரசியல்வாதிகள், சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் என எந்தவித பாகுபாடுமின்றி இந்தத் தொற்றினால் பலரும் சிக்கி பலியாகி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் உலகிலும் பல வீரர்களை கொரோனா தொற்று சீண்டி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர்.

Corona-1

ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பெற்றோர்கள் சிலர் இந்த தொற்றினால் இறந்தும் இருக்கிறார்கள். அந்தவகையில் பியூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங் போன்றவர்களின் தந்தை ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரவந்தி நாயுடு வின் தாயார் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது தாயின் சிகிச்சை செய்வதற்கு ஏற்கனவே 16 லட்சம் செலவு செய்த நிலையில் அவருடைய மேல் சிகிச்சைக்கு 6.77 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தினை தயார் செய்ய முடியாத ஸ்ரவந்தி நாயுடு நிதி உதவி கேட்டு பிசிசிஐ இடமும், ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

sravanthi 1

ஆனால் அதுகுறித்து அவர்கள் எந்தவித பதிலும் அவருக்கு அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த தேவையை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கோலியை டேக் செய்ய அந்த பதிவினை கண்ட கோலி உடனே ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார் மருந்து செலவிற்காக 6.77 லட்சத்தை கொடுத்து உதவியுள்ளார்.

- Advertisement -

sravanthi

கோலி செய்த இந்த உதவி தற்போது ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஏற்கனவே அனுஷ்கா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து 7 நாட்களில் 11 கோடியை நன்கொடையாக அளித்தது மட்டுமின்றி இதேபோன்று அடுத்தடுத்து தனிப்பட்ட முறையிலும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement