தோனி போன்றே தானும் ஜென்டில்மேன் கேப்டன் என்பதை நிரூபித்த கோலி – வைரலாகும் அசத்தல் புகைப்படம்

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இன்று சென்னை மைதானத்தில் துவங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர் பர்ன்ஸ் 33 ரன்களிலும், சிப்லி 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Root

மேலும் 3 ஆவதாக களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் குவித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் ரூட் மேலும் நாளைய போட்டியில் இன்னும் அவர் அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோருக்கு இடையேயான ஒரு நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரூட் சென்னை வெயிலை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறிது கஷ்டப்பட்டார்.

kohli

மேலும் அஸ்வின் வீசிய ஒரு பந்தை ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்த அவர் களத்திலேயே காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு படுத்துவிட்டார். இதனை பார்த்த இந்திய அணியின் கேப்டன் கோலி அவருக்கு முதல் உதவிகளை செய்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் பி.சி.சி.ஐ யும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட அந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

kohli 1

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் முன்பு தென் ஆப்பிரிக்க அணி வீரரான டூப்லெஸிஸ்க்கு தோனி செய்த அதே உதவியை தற்போது கோலி இங்கிலாந்து வீரருக்கு செய்துள்ளார் என்று அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும் கோலி செய்த இந்த அற்புதமான உதவி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement