சென்னை டெஸ்ட் தோல்வியின் எதிரொலி : கோலிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் – சிக்கலில் இந்திய கேப்டன்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Sundar 2

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கடினமான இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

Rahane

இந்திய அணியின் கேப்டனாக கோலி தொடர்ச்சியாக பெறும் நான்காவது தோல்வி என்பதாலும் இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அடையும் தோல்வியை என்பதாலும் கேப்டன் கோலி மீது தற்போது அதிருப்தி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணி தோற்ற பிறகு ரஹானே கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்தி அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினார்.

rahane

இதனால் கோலியை அப்போதிலிருந்தே அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி தோல்வியடைய தற்போது கேப்டன் பதவிக்காக கோலி மீது அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ரஹானேவை கேப்டனாக மாற்ற வேண்டும் என்ற அழுத்தம் உண்டாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement