மீண்டும் இப்படி நடந்தால் நாளைய போட்டியிலும் இந்தியா தோல்விதான் அடையும் – விவரம் இதோ

Ind

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

aus

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக விராட் கோலியின் பேட்டிங் இடமாற்றம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் வழக்கமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் இறங்கி பல்வேறு சாதனைகளையும் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி ராகுலை அணியில் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தனது மூன்றாவது இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.

கோலி நான்காவது இடத்தில் விளையாடினார். மூன்றாவது இடத்தில் ராகுல் நன்றாக விளையாடினாலும் நான்காவது இடத்தில் இறங்கிய கோலியால் இன்னிங்சை இறுதிவரை எடுத்துச் செல்ல முடியவில்லை. அவர் விரைவில் ஆட்டமிழக்க பின்னர் வந்த வீரர்கள் நிலைதடுமாறி இந்தியா தேவையான அளவு ரன்களை குவிக்க முடியாமல் போனது. எனவே இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இது காரணமாக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Rahul

இந்நிலையில் நாளை போட்டியிலும் ராகுல் மூன்றாவது வீரராக களம் இறங்கினால் கோலி நான்காவது வீரராகவே ஆடுவார் இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் சிறப்பாக ஆடிவருவதால் தேவையில்லாத அந்த மாற்றம் வேண்டாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

- Advertisement -

Kohli

மேலும் நிச்சயம் நாளை ராகுல் மூன்றாவதாக களமிறங்கி விரைவில் ஆட்டமிழந்தால் போட்டியின் முடிவு மாறும் என்றும் கருதப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் மூன்றாவது வீரராக கோலி களமிறங்க பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.