எதிரணியில் யாராக இருந்தாலும் சரி..! என் இரண்டு தளபதிகள் பார்த்துப்பாங்க..! இங்கிலாந்தை பயமுறுத்தும் கோலி..! – யார் தெரியுமா..?

இந்திய அணி சமீப காலமாக நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது.ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து போன்ற சின்ன நாடுகளுக்கு இடையேயான வெற்றி என்றாலும், இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட போகும் தொடருக்கு இந்த வெற்றிகள் இந்திய அணி வீரர்களுக்கு ஆயுத்தமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று கோலி நம்பிக்கை தெரிவியத்துள்ளார்.
KuldeepYadav
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐயர்லாந்து அணிக்கு இடையான இரண்டு டி 20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் எதிரணியை கம்மியான ரன்களில் ஆள் அவுட் செய்தும் சாதனை படைத்தது இந்த அணி.

மேலும் இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி “இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு முன்னாள் பெற்ற இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்றாகும். எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது யாரை தேர்தெடுப்பது என்று குழப்பமாக உள்ளது. எங்களை பொறுத்தவரை எதிரணி யார் என்பது முக்கியம் இல்லை.

மற்ற அணி பொலவே தான் எங்களுக்கு இங்கிலாந்து அணியும். நாங்கள் எங்களுடைய பலத்தை மட்டும் நம்பி விளையாடுகிறோம். அணியில் இரண்டு சபின்னர்கள் இருப்பது அணிக்கு மற்றுமொரு பலமாக இருக்கிறது. வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து கொண்டு இறக்கின்றனர். இங்கிலாந்து போன்ற சிறந்த அணிகளை எதிர்கொள்ள சக்தியும் எங்களுக்குள் இருக்கிறது ” என்று தெரிவித்துளளார்.

தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய பங்காற்றிய சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இரண்டு சூழல் பந்து வீச்சளர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் கோலி ‘அணியில் இரண்டு சபின்னர்கள் இருப்பது அணிக்கு மற்றுமொரு பலமாக இருக்கிறது. ‘ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.