கோலியிடம் காதல் சொன்ன வீராங்கனை ,அதற்கு கோலியின் பதில் என்ன தெரியுமா ?

koli
- Advertisement -

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர் டேனியல்லி வாய்ட். இவர் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 56பந்துகளில் சதமடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

wayyt

- Advertisement -

விரைவில் தொடங்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கான டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த அதிரடி தொடரும் எனவும் தன்னிடம் ரகசியமான ஆயுதம் ஒன்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.ஆம் “நான் விராட்கோலி பரிசளித்த கிரிக்கெட் பேட்டில் தான் விளையாடி வருகின்றேன்” என்கிறார்.

இந்திய அணி கடந்த 2014ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு போட்டியில் விராட்கோலி 72ரன்களை விளாசினார்.விராட்கோலியின் ஆட்டத்தில் மயங்கிய டேனியல்லி வாய்ட் டிவிட்டரில் விராட்கோலியிடம் “என்னை திருமணம் செய்து கொள்கின்றீர்களா” என்று கேட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

virat

டேனியல்லி வாய்ட் பதிவிட்ட டிவீட்டானது சில மணித்துளிகளில் பெரும் வைரலானது. அவரது அந்த பதிவுக்கு டிவிட்டரில் பல பதில் டிவீட்களும், போன்களும் வந்துகொண்டேயிருந்ததாம்.இதன் பின்னர் கோலியை சந்தித்த போது கோலி தன்னிடம் “நீ இதுபோன்ற வேலைகளை எல்லாம் டிவிட்டரில் செய்யக்கூடாது,பலரும் இதை தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்று கூறிய பின்னர் கோலி எனக்கு பரிசாக தான் பயன்படுத்தி வந்த கிரிக்கெட் பேட் ஒன்றை வழங்கினார்” என்கிறார்.

இனிமேல் வரும் போட்டிகளில் விராட் பரிசளித்த பேட்டை பயன்படுத்தி தான் விளையாடப்போகின்றேன் என்றும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றார்.இங்கிலாந்து ரசிகர்கள் கோலி பேட்டில் அப்படி என்னதான் ரகசியம் ஒளிந்துள்ளது என பார்க்க ஆர்வமாக உள்ளனராம்.

danille

Advertisement