தோல்வி அடைந்தாலும் இவர்களின் ஆட்டம் எனக்கு திருப்தி அளிக்கிறது – கோலி பேட்டி

Kohli-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஐயர் 70 ரன்களும், பண்ட் 71 ரன்களும் குவித்தனர்.

Pant 2

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர்கள் ஹோப் ஆட்டமிழக்காமல் 102 ரன்களும், ஹெட்மையர் 139 ரன்கலும் குவித்தனர். ஆட்டநாயகனாக ஹெட்மையர் தேர்வானார்.

போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் என்னுடைய ஆட்டம் கிளிக் ஆகவில்லை. எனவே இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை அப்படியே பயன்படுத்திக் கொண்ட பண்ட் மற்றும் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

pant

அவர்களின் இந்த ஆட்டம் எனக்கு திருப்தி அளிக்கிறது. சரியான நேரத்தில் அவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இது அணிக்கு கூடுதல் பலமான ஒரு விடயம் தான். மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நினைத்தோம் இருந்தாலும் அவர்களின் அதிரடி பேட்டிங்கை சுலபமாக்கியது.

- Advertisement -

Pant 1

ஹெட்மயர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. 6 பந்துவீச்சாளர்களுடன் இறங்கியது போதும் என்று நினைத்தேன் அவரது பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. மேலும் நாங்கள் கூடுதலாக 15-20 ரன்கள் வரை அடித்திருந்தாலும் அவர்கள் எளிதாக வெற்றிபெற்றிருப்பார்கள் என்று கோலி கூறினார்.