கோப்பையை கையில் வாங்கியதும் அந்த 2 வீரர்களிடம் கொடுத்து அழகு பார்த்த விராட் கோலி – நெகிழ்ச்சி தருணம்

Trophy

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணிக்காக இளம் வீரர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு அதில் சில வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் அறிமுக வாய்ப்பையும் பெற்றனர்.

ind

வழக்கமாகவே இந்திய அணி எந்த ஒரு தொடரை வெல்லும் போதும் அணியில் புதுமுக வீரர்களோ அல்லது அறிமுக வீரர்களோ இடம் பிடித்து விளையாடினால் அவர்களிடம் வெற்றிக் கோப்பையை இந்திய அணியின் கேப்டன்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து கேப்டன் கோலி டி20 தொடருக்கான வெற்றிக் கோப்பை அளிக்கப்பட்டது. அந்த வெற்றி கோப்பையை பெற்ற கோலி நேரடியாக வந்து இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரிடமும் கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடும் படி கூறினார்.

இதேபோல ஏற்கனவே பலமுறை இளம் வீரர்களிடம் கோப்பையை கொடுத்து ஒரு ஓரமாக நின்று அழகு பார்க்கும் கோலி நேற்றையதினம் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் கொடுத்து அவர்களை வெற்றியைக் கொண்டாடும் படி கூறி ஒரு ஓரத்தில் சென்று நின்று கொண்டிருந்தார். கோலியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது. மேலும் இந்திய அணியில் எப்போது வீரர்கள் இளம் வீரர்கள் அறிமுகமானாலும் இந்த வழக்கம் பின்பற்றப்படுவது நாம் பார்த்து வருவதே.

sky

அந்த வகையில் நீண்ட நாளாக சிறப்பாக தங்களது திறமையை உள்ளூர் கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடர்களிலும் சரி வெளிக்காட்டி வந்த இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்று இருவரும் தங்களது அறிமுகப் போட்டியில் அரை சதம் விளாசி தங்களது திறமையை நிரூபித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ishan

இதில் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஒருநாள் தொடருக்கான அணியிலும் இரண்டு அறிமுக வீரர்கள் க்ருனால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் அணியில் புதிதாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.