நாடு திரும்பும் முன் கோலி செய்த தீவிர ஆலோசனை. நடராஜனிடமும் ஆலோசனை – விவரம் இதோ

Nattu
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி டி20 தொடரில் இரண்டு முறை வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

indvsaus

- Advertisement -

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி கர்ப்பமாகஇருப்பதால் இந்தியா திரும்பவுள்ளதால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்தியா திரும்பும் முன் அணியில் ஒரு ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்கள் எவ்வாறு விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளை விராட் கோலி கூறியுள்ளார்.

Nattu-1

முக்கியமாக விளையாடும் 11 வீரர்களிடம் நீண்டநேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் யார் எல்லாம் விளையாட வேண்டும், யார் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கேஎல் ராகுல், சுப்மான் கில், சிராஜ், ஜடேஜாஆகியோரிடம் நீண்டநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

nattu 1

அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பந்துவீச்சு விதத்தை விராட் கோலி பாராட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் நடராஜனின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவரை பாராட்டியுள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி நடராஜனிடமும் அவர் நீண்ட நேரம் பேசினாராம். அப்படி அவர் பேசும்போது இந்த டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வந்தால் விளையாட தயாராக இருக்கும்படி நடராஜனிடம் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement