நதீம் இந்திய அணியில் இணைய கோலி போட்ட ரகசிய திட்டம். காரணம் இதுதான் – விவரம் இதோ

Nadeem-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை அதிகப்படுத்தும் என்பதால் இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற மும்முரமாக விளையாடி வருகிறது.

Nadeem

- Advertisement -

இந்நிலையில் ராஞ்சி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது என்பதால் மூன்றாவது டெஸ்டில் மூன்று சுழற்பந்து வீச்சாளர் உடன் களம் இறங்கும் இடத்தில் இந்திய அணி இருந்தது. அதன்படி மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இருந்த குல்தீப்புக்கு காயம் ஏற்பட திடீரென்று சபாஷ் நதீம் இந்திய அணியில் நேற்று அறிமுகம் ஆனார். மேலும் அவரை ஏன் கோலி அணியில் சேர்த்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி முதல் தரப் போட்டிகளில் 424 விக்கெட்டுகள் மற்றும் ரஞ்சி கோப்பையில் இரண்டு முறை 50 விக்கெட்டுகள் எடுத்த நதீம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். சொந்த ஊர் மைதானம் என்பதால் அவருக்கு இந்து ஆடுகளத்தின் நெளிவு சுளிவு அனைத்தும் தெரியும் என்ற காரணத்தினால் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரை போட்டிக்கு முந்தைய நாள் இரவு 7 மணியளவில் திடீரென இந்திய அணியில் அழைத்து அடுத்தநாளே வாய்ப்பு கொடுத்து தனது திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார் கோலி.

சபாஷ் நதீம் சுமார் 15 ஆண்டுகளாக பீகார் மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் இவர் தொடர்ந்து அசத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 30 வயதில் தான் இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement