2 மணி நேரம் நடந்த மீட்டிங். நம்பர் 1 பவுலரை வெளுத்து வாங்கிய கோலி – எச்சரிக்கை செய்து கறார்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கவுள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடியும் வரை இந்திய அணிக்கு அழுத்தம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கும் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது எப்படி அமைய போகிறதோ அதனை பொறுத்து தான் அணியில் உள்ள மாற்றங்கள் இருக்கும்.

- Advertisement -

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பல வீரர்கள் சொதப்பியதன் காரணமாக அவர்கள் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக புஜாரா நீக்கப்பட்டு கோலி அந்த இடத்தில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் பும்ரா நியூசிலாந்து அணிக்கு எதிராக அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பந்துவீச்சை கஷ்டமே இல்லாமல் நியூசிலாந்து வீரர்கள் எதிர்கொண்டனர். முதல் இன்னிங்சில் 26 ஓவர்களை வீசி 57 ரன்களை விட்டுக் கொடுத்த பும்ரா இரண்டாவது இன்னிங்சிலும் 10.4 ஓவர்கள் வீசி 35 ரன்களை விட்டுக் கொடுத்தார், இரண்டு இன்னிங்சிலும் அவரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

bumrah 2

இந்நிலையில் அவரால் விக்கெட் வீழ்த்த முடியாதது ஏன் என்றும், நியூசி அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாதது ஏன் என்றும் கோலி டீம் மீட்டிங்கில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து தொடரில் களமிறங்க வேண்டும் என்றால் 100% ரிசல்ட் தருவதில் உறுதியாக உள்ளவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அதற்கு தயாராக இருந்தால் விளையாடுங்கள் என்று காரசாரமாக கோலி விவாதித்ததாக கூறப்படுகிறது.

Bumrah

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்டிங்கில் பும்ராவை ஷார்ட் பிட்ச் பந்தை அதிகமாக ஏன் வீச முடியவில்லை என்பது போன்றும் காரசாரமாக கோலி விளாசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக வரும் இங்கிலாந்து தொடரில் பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement