ஆஸ்திரேலிய மண்ணில் மற்றும் ஒரு வரலாற்று சாதனையை படைக்கவிருக்கும் கோலி – விவரம் இதோ

Kohli

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்று விளையாடும்போது ஒரு அற்புதமான வரலாற்று சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது. எதிர்வரும் தொடரில் ஒரே ஒரு சதத்தை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த மண்ணில் அதிக சதங்களை அடித்த வீரராக வரலாற்று சாதனையை கோலி நிகழ்த்துவார்.

இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜேக் ஹோப்ஸ் மட்டுமே 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் என ஆஸ்திரேலிய மண்ணில் மொத்தம் 9 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Kohli-1

எதிர்வரும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு சதத்தை அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Kohli-3

மேலும் கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக கைப்பற்றியிருந்தது. அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.