சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைக்கவிருக்கும் கோலி – நாளைய போட்டியில் நடக்குமா ?

Ponting
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது சதமடித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று உள்ள 11 இன்னிங்ஸ்களில் அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதுவரை இரண்டு அரை சதங்கள் அடித்த அவர் அதனை சதமாக மாற்ற தவறிவிட்டார்.

Kohli-1

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் கோலியின் சததிற்காக காத்திருக்கும் வேளையில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஒருவேளை கோலி சதம் விளாசினால் அதன்மூலம் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை ஒன்றை படைக்கவிருக்கிறார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் நான்காவது போட்டியில் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் கேப்டனாக அதிக சதம் விளாசிய என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங்கை அவர் பின்னுக்குத்தள்ளி அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார். தற்போது வரை ரிக்கி பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்களை அடித்து தற்போது சமநிலையில் உள்ளனர்.

kohli

நாளைய போட்டியில் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் 42 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெற இருக்கிறார். ஏற்கனவே 24ஆம் தேதி நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Dhoni

அந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற சாதனையை தோனியிடம் இருந்து விராட் கோலி பறித்தார். தோனி தலைமையிலான இந்திய அணி 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளைப் பெற்றது. ஆனால் கோலி தலைமையிலான இந்திய அணி 29 போட்டிகளிலேயே 22 வெற்றிகளை குவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement