4 ஆவது டி20 போட்டி எதிர்பார்த்த 2 மாற்றங்களை செய்த கோலி – நீங்க கண்டிப்பா இதை எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க

INDvsENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் 4 ஆவது முக்கியமான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

INDvsENG

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே மூன்றாவது போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப் பின்னர் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்று இந்திய அணியில் முக்கிய இரண்டு மாற்றங்களை கோலி செய்துள்ளார்.

அதில் யாருமே எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷனை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சூரியகுமார் யாதவை மூன்றாவது வீரராக களம் இறங்கி உள்ளார். ஏனெனில் ஏற்கனவே ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று கோலி கூறிவிட்டதால் அவர்களின் ஜோடியை பிடிக்காமல் இன்றும் அவர்களே துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

மூன்றாவது இடத்தில் விளையாடிய இஷான் கிஷனை நீக்கிவிட்டு தற்போது சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் அதேபோன்று கடந்த மூன்று போட்டிகளில் விளையாடி வந்த சுழல் பந்துவீச்சாளர் சாஹல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன்காரணமாக தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ragul chahar

அவருக்கு பதிலாக இளம் வீரரான ராகுல் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த இரண்டு மாற்றங்களை இந்திய அணி இன்று செய்துள்ளது.