Virat kohli : கோலியின் காயம் குணமடையாவிட்டால் இவரே இந்திய அணியின் கேப்டன் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

dhoni
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஆரம்ப போட்டிகளில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன.

worldcup 1

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் போட்டி வரும் 5-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக ஆரம்பிக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேபோன்று முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியை வீழ்த்த தயாராகி வருகிறது.

எனவே இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மை. இந்நிலையில் இந்திய அணிக்கு தற்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது வலதுகையின் பெருவிரலில் காயமடைந்தார். உடனே முதலுதவி சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்ததால் கோலி பயிற்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

kohli 1

அவருடைய காயம் குறித்த எந்த தகவலும் இதுவரை அணி நிர்வாகம் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கோலி வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், வீக்கம் குறையாமல் இருப்பதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி களம் இறங்குவது சந்தேகமாக உள்ளது.

hitman

ஒருவேளை கோலி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன் முழுவதுமாக குணமடையாவிட்டால் அவருக்கு பதிலாக இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த உலகக் கோப்பை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் கோலி நிச்சயம் உடல் தகுதி பெற்று இந்த போட்டியில் ஆடுவார் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement