கோலிக்கு இந்த வருடத்தில் இதுதான் முதல் முறையாம். இதனை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Rahane

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் அவருக்கு உறுதுணையாக ஆடிவரும் ரஹானே சதத்தை நெருங்கி வருகிறார். இந்திய அணி இதுவரை 2 ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்துள்ளது. ரஹானே 82 ரன்களும், மாயங்க் அகர்வால் 156 ரன்களை அடித்துள்ளார். இதுவரை இந்திய அணி 153 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் இந்த வருடத்தில் தற்போதுதான் முதல் போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.

Kohli

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா மைதானத்தில் டக் அவுட்டானார். அதற்கு முந்தைய ஒரு வருடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் டக் அவுட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டனாக கோலிக்கு இது ஆறாவது டக் அவுட் ஆகும்.

Advertisement