தோனியின் அசைக்க முடியாத சாதனை என்று கருதப்பட்ட இந்த சாதனையை சமன் செய்ய உள்ள – கிங் கோலி

ms
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தோனியின் அற்புதமான சாதனை ஒன்றை முறியடிக்க கோலிக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 46 வது டெஸ்ட் போட்டிகளில் தலைமையை ஏற்றுள்ள கோலி 26 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார். இதற்கு முன்னதாக தோனி 60 போட்டிகளில் 27 போட்டிகளில் கேப்டனாக வெற்றி பெற்று தந்துள்ளார்.

kohli dhoni

எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை சமன் செய்வார். மேலும் சர்வதேச அளவிலும் கோலி கேப்டனாக சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற பெருமையையும் அவர் ஏற்கனவே படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement