இன்றைய போட்டியில் ரோஹித்தை தாண்டவிருக்கும் கோலி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஜனவரி 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இன்றைய போட்டியில் கோலி ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேற உள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா 2633 ரன்களுடன் வைத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் கோலி 70 ரன்கள் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் அந்த சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் கோலி சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடர் முழுவதும் ஓய்வு காரணமாக ரோஹித் விளையாட மாட்டார் என்பதால் கோலி இந்த மூன்று போட்டியில் அடிக்கும் ரன்கள் இவர்கள் இருவரிடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

Rohith

மேலும் டி20 போட்டிகளில் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வரும் ரோகித் கோலி ஆகியோர் அதை அவ்வப்போது தாங்களே முந்திக் கொண்டும் வருகிறார்கள். இவர்களுக்கு இடையேயான ரன் போட்டியும் இந்திய அணிக்கு ஒரு வகையில் நல்லதுதான் ஏனெனில் இந்திய அணி வெற்றி பெற்றுவரும் பல போட்டிகளில் இவர்கள் இருவரது ஆட்டமும் முக்கியமாக அமைந்துள்ளது.

- Advertisement -