“Form”-ன் உச்சத்தில் இருக்கும் கோலி.! அடுத்து நிகழ்த்த இருக்கும் சாதனை என்ன தெரியுமா.?

virath-kohli
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி பல சாதனைகளை புரிந்து வருகிறார். மேலும், ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க 4வது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு அருமையான சாதனையை நிகழ்த்த உள்ளார். இங்கிலாந்து மண்ணில் ஒற்றை வீரராக இந்திய அணியை நின்று காப்பாற்றி வருகிறார். கோலி அடுத்து நிகழ்த்த உள்ள சாதனை பற்றி பார்ப்போம்.

ko

கோழி இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். 5994 ரன்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார் மேலும், 6 ரன்களை அவர் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை நிறைவு செய்வார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை நிறைவு செய்யும் 10ஆவது வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.

- Advertisement -

இதுமட்டுமின்று, 153 ரன்களை அடித்தால் அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 18000 ரன்களை நிறைவு செய்வார். 211 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 9779 ரன்களை அடித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 சதங்கள் மற்றும் ஒரு நாள் போட்டியில் 35 என 58 சதங்களை அடித்து நொறுக்கி இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 54 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

virat kohli

நவீன கிரிக்கெட்டின் கில்லாடியாக வலம் வரும் கோலி இன்னும் நிறைய சாதனைகளை முறியடிப்பார். உலகின் பல முன்னாள் வீரர்களும் சில வருடங்களாக கோலியின் விளையாட்டினை பிரமிப்புடன் பார்க்கிறாரகள். கோலியும் உலகின் எந்த மூலைக்கு சென்று விளையாடினாலும் ரன்களை அடித்து குவிக்கிறார். தனது வாழ்நாளின் மிகச்சிறந்த பார்ம்மில் தற்போது அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement