தனது விக்கெட்டை வீழ்த்துவேன் என்று கூறிய ரபாடாவுக்கு தக்க பதிலடி கொடுத்த கோலி – விவரம் இதோ

Rabada

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Kohli 1

நேற்றைய போட்டியில் இந்திய அணி சேசிங் செய்த போது இந்திய அணியின் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னால் அந்த அணியின் கேப்டன் டிகாக் மற்றும் கோலிக்கு இடையே கடுமையான மோதல் இருக்கும் என்றும் ரபாடா கோலியின் விக்கெட்டை கைப்பற்றுவார் என்றும் கூறியிருந்தார். மேலும் கோழியின் விக்கெட் வீழ்த்துவேன் ரபாடாவும் கூறியிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் கோலி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ரபாடாவை ஒரு கை பார்த்த கோலி அவர் வீசிய ஒரு ஓவரில் லெக் சைடில் பிலிக்ஷாட் மூலம் அசால்டாக சிக்ஸ் அடித்து ரபாடாவின் பந்துவீச்சை பிரித்தெடுத்தார். கோலி அடித்து அந்த சிக்சர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து வரும் இந்திய ரசிகர்கள் ரபாடாவின் பேச்சுக்கு இதுதான் பதில் என்று அந்த விடீயோவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -