இந்தமுறை கோப்பையை வென்று யார் கையில் கோலி கொடுத்திருக்கார் பாருங்க – புகைப்படம் உள்ளே

Cup

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி 2019 ஆம் ஆண்டின் சிறப்பாக நிறைவு செய்துள்ளது.

வழக்கமாகவே தோனி தலைமையிலான இந்திய அணி இதனைப் போன்ற தொடரை வெற்றி பெறும்போது இளம் வீரர்கள் யாரேனும் அணியில் இருந்தால் அவர்களிடம் கோப்பையை கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தை ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தது. தோனியின் அந்த பழக்கத்தை அப்படியே தற்போதைய கேப்டன் கோலியும் பின் தொடர்ந்து வருகிறார்.

அதன்படி கடைசியாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியபோது இளம் விக்கெட் கீப்பர் ஆன கேஸ் பரத் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் இணைந்து இருந்தார். எனவே அவரிடம் வெற்றி கோப்பையை கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் கோலி ஈடுபட்டார்.

cup 1

தற்போது அதன் பிறகு தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றபோது துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் கைகளில் கோப்பையை கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்த சொன்னார். இப்படி கொண்டாடப்படும் இந்திய அணியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

- Advertisement -

saini

இப்படி தொடர்ச்சியாக இளம் வீரர்கள் இடம் கோப்பையை கொடுத்து கொண்டாட வைத்துக் கொண்டிருக்கும் கோலி இந்த ஒருநாள் தொடர் வெற்றிக்கு பின்னர் தற்போது இந்திய ஒருநாள் அணிக்கு இந்த தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான நவதீப் சைனியிடம் வெற்றிக்கோப்பையை கொடுத்து கொண்டாட கேட்டுக்கொண்டார் இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.