ரஹானேவை களமிறக்காமல் கோலி எடுத்த அதிரடி முடிவு. கடைசில வேஸ்ட்டா போச்சு – இதை கவனிச்சீங்களா ?

Kohli
- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டுள்ள நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று காலையிலேயே புஜாரா தேவையின்றி ரன் அவுட் ஆனார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவரது பேட்டை தவறவிட்டதால் தேவையின்றி ரன் அவுட் ஆனார்.

Rohith

- Advertisement -

அதன்பின் ரோஹித் சர்மாவும் தேவையின்றி கிரீஸை தாண்டி செல்ல கீப்பர் பென் போக்ஸ் அவரை கண் இமைப்பதற்குள் ஸ்டம்பிட் செய்தார். இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் அவுட்டான நிலையில் இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து அதிர்ச்சி அளித்தது. ரோஹித்துக்கு பின் ரஹானே தான் களமிறங்குவார் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த வேளையில் ரிஷப் பண்ட் இறங்கினார்.

களத்தில் இடதுகை ஆட்டக்காரர் வேண்டும் என்றும் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக அதிரடியாக ஆடவேண்டும் என்ற காரணத்தினாலும் ரஹானேவிற்கு பதிலாக பண்டை களமிறங்கும்படி விராட் கோலி கூறியுள்ளார். இடதுகை ஸ்பின் பவுலர்கள் பவுலிங் செய்கிறார்கள். இதனால் பிட்ச் பண்ட் ஆடுவதற்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக பண்டை களமிறங்கும்படி கோலி கூறியுள்ளார்.

Pant

ஆனால் பண்டும் 11 பந்துகள் பிடித்த நிலையில் போக்ஸால் ஸ்டம்பிட் செய்தார். வரிசையாக மூன்று முக்கிய வீரர்களும் ஸ்டம்பிட் முறையில் அவுட் ஆனார்கள். ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொள்வார்கள் என்று பண்டை கோலி அனுப்பினார். ஆனால் கோலியின் இந்த வீயுகம் இந்திய அணிக்கு கை கொடுக்காமல் பயனின்றி போனது.

ashwin 2

அதன்பின்னர் ரஹானேவும் ஆட்டமிழந்து செல்ல அஷ்வின் கோலியுடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். மேலும் இரண்டாவது இன்னிங்சின் முடிவில் அஷ்வின் சதமடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement