ரோஹித்துக்கு நெருக்கடி கிடையாது. அவர் இதனை செய்தால் இந்தியாதான் டாப் – கோலியின் அதிரடி திட்டம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை நேற்று இந்திய அணி கேப்டன் கோலி வெளியிட்ட பின்னர் இந்த பேட்டியின்போது துவக்க வீரர் ரோஹித் சர்மா குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்து இருந்தார்.

IND vs RSA

- Advertisement -

அதில் கோலி கூறியதாவது : ரோகித் சர்மா துவக்க வீரராக அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவருக்கு இத்தனை போட்டிகளில் தான் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நெருக்கடியை நாங்கள் தர மாட்டோம் .ஏனெனில் அப்போதுதான் அவரால் இயல்பாக ஆட முடியும்.

மேலும் ரோகித் சர்மா துவக்க வீரராக அந்த வரிசையில் வெற்றி பெற்றால் அது எங்களது அணியின் பேட்டிங் வலிமையை கூட்டும். ரோகித் சர்மா அப்படி வெற்றி பெறும்போது எங்களது அணி டாப் ஆர்டரில் மிரட்டும் அச்சுறுத்தும் அணியாக திகழும். ஒவ்வொருமுறையும் துவக்க வீரராக ரன் குவிப்பது கடினம் இருந்தாலும் ரோகித் சர்மா வழக்கம்போல தனது ஆட்டத்தை ஆடி அவரது திறமையை வெளிப்படுத்தினால் இந்திய அணி டாப் ஆர்டர் மேலும் வலுப்படும்.

Rohith

அதுமட்டுமின்றி ரோகித் சர்மாவிற்கு அவரது இயல்பான ஆட்டம் வரும்வரை டெஸ்ட் போட்டிகளின் துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்படும் அப்படி அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் சிறப்பாக ஆடினால் எதிராணிகளுக்கு இந்திய அணி கடும் மிரட்டலை கொடுக்கும் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement