கடைசில கோலிக்கும் பிரச்சனையா ? இன்றைய போட்டியில் விளையாவதில் சிக்கலா ? – விவரம் இதோ

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஜனவரி 5 ஆம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Kohli-1

- Advertisement -

இந்நிலையில்இந்த போட்டிக்கான இவ்விரு அணிகளும் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இடது கை சுண்டு விரலில் நேற்று காயம் ஏற்பட்டது. மேலும் இந்திய அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த முதல் பாதியிலேயே கோலிக்கு காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து கோலி வலிநிவாரண ஸ்பிரே அடித்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் அவரது காயத்திற்கான முதலுதவி செய்தார். இன்று போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் நேற்று கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்து வந்த வேளையில் இடது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் அவ்வளவு பெரியதாக இல்லை என்றும் கோலி நிச்சயம் இந்த ஆட்டத்தில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Kohli

ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், தவான் மற்றும் பாண்டியா என முக்கிய வீரர்கள் தொடர்ந்து காயத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது கோலிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement